ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,584ஆக உயர்வு

0 1014

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 584ஆக அதிகரித்துள்ளது.

15 மண்டலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 398ஆக உயர்ந்துள்ளது. இதில் ராயபுரத்துக்கு அடுத்து அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்து 584 பேருக்கும், தேனாம்பேட்டையில் 3 ஆயிரத்து 291 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கோடம்பாக்கத்தில் கொரோனா பாதிப்பு 2ஆயிரத்து 966 ஆகவும், அண்ணாநகரில் 2 ஆயிரத்து 571ஆகவும், திருவிக நகரில் 2 ஆயிரத்து 550ஆகவும், அடையாறில் ஆயிரத்து 534ஆகவும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 217ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 13 ஆயிரத்து 698 பேர் சிகிச்சையில் குணமான நிலையில், 13 ஆயிரத்து 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுதவிர்த்து சிகிச்சை பலனின்றி 275 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதித்தோரில் 60 புள்ளி 20 சதவீதம் ஆண்கள் ஆவர். 39 புள்ளி 80 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments