கொரோனாவில் பெஸ்ட் ரசாயண மாசில் பர்ஸ்ட்..! மணலி மண்டல மர்மம்

0 5827

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த மண்டலமாக கண்டறியப்பட்டுள்ள மணலியின் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக எரிக்கப்படும் ரசாயண கழிவுகளால் கூடுதல் மாசு ஏற்பட்டு மக்கள் மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சென்னையில் கொரோனா உச்சத்தில் இருந்தாலும் மணலி மண்டலத்தில் மட்டும் 204 பேர் தான் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா கிருமி பரவலின் வேகம் குறைந்து காணப்படும் இந்த மணலி மண்டலம் தான் மாசு நிறைந்த பகுதிகளில் நம்பர் ஒன்னாக உள்ளது. இங்குள்ள காற்றில் பரவியுள்ள ரசாயண மாசுக்கள் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்துகிறதோ ? என்று எண்ணும் அளவுக்கு காற்று மாசடைந்து காணப்படுகின்றது.

சி.பி.சி.எல்லில் இருந்து 24 மணி நேரமும் வெளியாகும் பெட்ரோலிய கழிவுகளால் காற்றும், நிலத்தடி நீரும் கடுமையாக மாசடைந்துள்ள நிலையில், மணலி புது நகரில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் தனியார் நிலங்களை குத்தகைக்கு எடுத்து குப்பை கிடக்குகள் அமைத்து விச்சூர், நாப்பாளையம் பகுதியில் உள்ள ரசாயண நிறுவனங்களின் கழிவுகள் பேரல் பேரலாக எடுத்து வந்து தீவைத்து எரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

அந்த பகுதியில் காற்றில் பரவும் கரும்புகையால் வயதானவர்கள் பலர் சுவாசக்கோளாறால் பாதிக்கப்படு வதாகவும, மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக, பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறினால் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஊரே கொரோனாவுக்கு அஞ்சி கிடக்க, இப்பகுதி மக்கள் சுவாசிக்கும் காற்றுக்கும், நிலத்தடி நீர் மாசுக்கு அஞ்சி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரசாயண ஆலைகழிவுகளை கொட்டி தீவைக்கும் சமூக விரோதிகளுக்கு எதிராக இப்பகுதி மக்கள் போராட்டத்தை முன் எடுக்கும் முன்பாக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments