கொரோனா தொற்று - இந்திய அளவில் தமிழக காவல்துறை மூன்றாம் இடம்

0 4296

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் வரிசையில் தமிழக காவல்துறை மூன்றாவது இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு களப்பணியாளர்களான காவல் துறையினருக்கும் அதிகமாக பரவி வரும் நிலையில் இதுவரை நாடு முழுவதும் 6810 காவல் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகள் அதிகமாக உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் காவல் துறையினர் 3000 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.

தொடர்ச்சியாக டெல்லி காவல் துறையில் 689 பேரும்  தமிழக காவல் துறையில் 560 பேரும் இதுவரை பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் எல்லை பாதுகாப்பு வீரர்கள் 491 பேரும், மத்திய ரிசர்வ் போலீசார் 363 பேரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் காவல் துறையினர் 61 பேர் கொரோனா பெருந் தொற்றுக்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments