கொரோனாவால் வேலையிழந்த தொழிலாளர்கள் வங்கிக்கணக்கில் தலா ரூ.10 ஆயிரம்..!

0 6400

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகனின் ஜகனன்னா உதவி திட்டத்தின் கீழ் கொரோனாவால் வேலையிழந்துள்ள தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் தலா 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 

தடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து ஜெகன் மோகன் துவக்கி வைத்த இந்த திட்டத்தின் படி, சவரதொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், தையல்காரர்கள் சுமார் இரண்டு லட்சத்து 47 ஆயிரத்து 40 பேருக்கு வங்கி கணக்கில் தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 247.04 கோடி ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ஜெகன்மோகன், தகுதியுள்ள அனைவருக்கும் சாதி, மதம், கட்சி என எந்த பாகுபாடும் இல்லாமல் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments