ஜெ.அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

0 2528

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, தி.மு.க.  முன்னெடுத்த செயல்திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்றுவதற்காக சிறிதும் ஓய்வின்றி ஜெ.அன்பழகன் களப்பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்திய  ஜெ.அன்பழகன், பொதுவாழ்வின் தியாக தீபமாக சுடர்விட்டொளிர்வதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுவதாகவும், திமுக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments