சுமார் ரூ.19ஆயிரம் கோடி அளவிலான கொகைன் பறிமுதல்

0 1005

கொலம்பியாவில் சுமார் 19ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான கொகைன் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

பசிபிக் கடற்கரை துறைமுகமான பியூனவென்சுராவில் கப்பலில் உள்ள 2 கண்டெய்னர்களில் இருந்து சுமார் 5டன் அளவிற்கு கொகைன் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 265 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 19ஆயிரம் கோடி ரூபாயாகும்.

இந்த கடத்தல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என கொலம்பிய போலீசார் தெரிவித்தனர். இந்த வருடத்தில் கொலம்பியாவில் கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் சம்பவம் இதுவாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments