ஆபரேஷன்கள் 36... தீவிரவாதிகள் 88 பேர் அவுட்... எப்போதுமில்லாத அதிரடியால் கலக்கத்தில் பயங்கரவாத குழுக்கள்!

0 10503
ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தில்பக் சிங்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தனது பிடியைக் கடுமையாக இறுக்கி வருகிறது, இந்திய பாதுகாப்புப் படை. புல்வாமா தாக்குதல் போன்றே ஜெய்ஷ் ஈ முகம்மது (JeM) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இணைந்து நடத்தத் திட்டமிட்டிருந்த IED தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்த வருடத்தில் மட்டும் 36 தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் 88 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி தகர்ப்பு என்று அடுத்தடுத்து ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

சமீபத்திய தீவிரவாத தாக்குதல் முயற்சி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தில்பக் சிங் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, "கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 9 தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம்  22  தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நீண்ட நாள்களாகத் தேடப்பட்டு வந்த ஆறு தீவிரவாதிகளையும் கொன்றிருக்கிறோம். ஒன்பது ஹிஸ்புல் முஜாஹிதீன் (HM) தீவிரவாதிகள் கடந்த இரண்டு நாளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நான்கு தீவிரவாதிகள் திங்கள் கிழமை காலையில் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள்.

கடந்த இரண்டு வாரங்களாகப் பாதுகாப்புப் படை ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் ஒன்பது ஹிஸ்புல் முஜாஹிதீன் (HM) தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களைக் கொலை செய்தது, காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் தொடுத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூன்று தலைமை தளபதிகளும் கொல்லப்பட்டவர்களில் அடக்கம்.

அவந்திபூராவில் தீவிரவாதக் குழுவோடு இணையவிருந்த இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மூன்று இளைஞர்களை மீட்டு அவர்களின் குடும்பத்தோடு சேர்த்திருக்கிறோம். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 9 தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம்  22  தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நீண்ட நாள்களாகத் தேடப்பட்டு வந்த ஆறு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஜம்முவில் நவ்ஷோரா செக்டரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற மூன்று தீவிரவாதிகளும் காலகோட் செக்டரில் ஊடுருவ முயன்ற ஒரு தீவிரவாதியும் பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவங்கள் பாகிஸ்தானும் அதன் ஆதரவில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளும் தொடர்ந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருரவைக்க முயற்சி செய்வதையே காட்டுகிறது.

மே 28 - ம் தேதி ஜெய்ஷ் ஈ முகம்மது (JeM) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பும் இணைந்து திட்டமிட்டிருந்த மிகப்பெரிய IED (improvised explosive device) தாக்குதல் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. 150 கி.கிராம் IED கைப்பற்றப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதல் மட்டும் நடந்திருந்தால் புல்வாமாவில் நடந்தது போன்ற  மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும். ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தோடு இணைந்து இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட அப்துல் ரஹ்மான் என்ற பவுஜி பாய் என்பவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

தடை செய்யப்பட லஷ்கர் ஈ தொய்பா மற்றும்  ஜெய்ஷ் ஈ முகம்மது அமைப்புகளின் பெயரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பயங்கரவாத மறுமலர்ச்சி முன்னணி (Terrorist Revival Front) என்ற பெயரில் பெரும்பாலான தீவிரவாதிகள்  லஷ்கர் ஈ தொய்பா மற்றும்  ஜெய்ஷ் ஈ முகம்மது அமைப்புகளிலிருந்து விலகி  இணைகிறார்கள். பயங்கரவாதத்தை கூடிய விரைவில் அகற்றுவோம்" என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments