தென்னிந்திய வீரர்களையும் 'காலு ' என்று அழைப்பது வடஇந்திய ரசிகர்களின் வழக்கம்! - டேரன் சமிக்கு ஆதரவாக இர்ஃபான் கருத்து

0 6879
டேரன் சமியுடன் இர்ஃபான் பதான்

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் என்பவர் வெள்ளையின போலீஸாரால் கொல்லப்பட்டார்.. இந்த சம்பவத்துக்கு பிறகு,பல பிரபலங்களும் தாங்கள் சந்தித்த இன வெறி தொடர்பான சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில், வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஹைதரபாத் அணி வீரர் டேரன் சமி, ஐ.பி.எல் தொடருக்காக இந்தியாவில் விளையாடிய காலக்கட்டத்தில் இந்திய ரசிகர்கள் இனவெறியுடன் நடந்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ''ஹைதரபாத் அணிக்காக விளையாடிய , என்னையும் , திசெ ஃபெரரைவையும் 'காலு ' என்று மைதானத்திலிருந்த ரசிகர்கள் அழைத்தனர். காலு என்று அழைக்கும் போது,'நல்ல வலுவான கருப்பு மனிதர் ' என்று நான் நினைர்துக் கொண்டேன்.

தற்போதுதான் காலு என்றால் 'கருப்பன்' என்று அர்த்தம் என்பது என்று புரிந்தது'இந்த சம்பவம் குறித்து, டிரெஸ்ஸிங் அறையில் டீம் மேட்கள் பர்தீவ் பட்டேல், இர்ஃபான் பதான் ஆகியோரிடத்தில் பகிர்ந்து கொண்டேன் '' என்றும் கூறியிருந்தார்.

டேரன் சமியின் இந்த குற்றச்சாட்டுக்கு பர்தீவ் பட்டேல் மற்றும் இர்ஃபான் பதான் வேறு வேறு கருத்துகளை முன் வைத்துள்ளனர். . பர்தீவ் பட்டேல், டேரன் சமியின் குற்றச்சாட்டிலிருந்து  மாறுபடுகிறார். 'டேரன் சமியை பார்த்து காலு என்று யாரும் அழைத்து நான் பார்க்கவில்லை ' என்று பர்தீவ் கூறியுள்ளார்.

அதே வேளையில் ,இர்ஃபான் பதான் கூறுகையில், '' 2014- ம் ஆண்டு டேரன் சமியுடன் நான் இருந்தேன்.  அப்போது, இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என நினைக்கிறேன்.  ரசிகர்கள் அப்படி அழைத்தது உண்மையென்றால் நிச்சயம் இது விவாதிக்கப்படக் கூடியது. வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்ல தென்னிந்தியாவை சேர்ந்த வீரர்களை  கூட காலு போன்ற வார்த்தைகளால் வட இந்தியர்கள் அழைப்பது உண்டு. இது போன்ற சம்பவங்களை நான் நேரில் பார்த்துள்ளேன். விபீரீதம் என்று அறியாமல் ஜாலிக்காக இதை செய்கின்றனர்  ரசிகர்களுக்கு மத்தியில் இனவெறி கூடாது என்பதை வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது.'' என்று தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments