மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது-அதிபர் டிரம்ப்

0 4614

மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்திற்கு நீதிகேட்டு, அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2ஆம் தேதி இரவு, அடையாளந் தெரியாத விஷமிகள் சிலர், வாஷிங்டனில் இந்திய தூதரகம் அமைந்துள்ள வீதியில், மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தினர். இதுகுறித்து இந்திய தூதரகம் புகார் அளித்துள்ளது.

சிலையை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமான செயல் என, செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அண்மையில் டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் இந்தியா வந்திருந்தபோது, அகமதாபாத்தில் சபர்மதி ஆஸ்ரமத்திற்கு சென்று, பிரதமர் மோடியுடன் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments