9 லட்சம் மாணவர்களின் உயிருடன் விளையாடுவதை அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

0 4928

9 லட்சம் மாணவர்களின் உயிருடன் விளையாடுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், 10ஆம் வகுப்பு பொது தேர்வை ஜூன் 15ஆம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. தேர்வை ஜூலை 2வது வாரத்தில் நடத்தலாமா? என்பதை தெரிவிக்க, அரசுத்தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க கோரி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. கொரோனா பரவலின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், கட்டுப்பாட்டு பகுதிகளிலும் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது என்றும், ஆசிரியர்கள் காத்திருப்பு கூடங்களில் தனிமனித இடைவெளி சாத்தியமில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஏற்கெனவே தேர்வு 2 மாதங்கள் தள்ளிப்போயுள்ளதை நீதிபதிகள் அப்போது சுட்டிக்காட்டினர். 10ஆம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ளும் மொத்த மாணவர்களில் 30 சதவீதம் பேர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர் தரப்பு, ஜூலை மாதத்திற்கு தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தியது.

லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் எப்படி ரிஸ்க் எடுப்பீர்கள் என அரசு தரப்பை கேட்ட நீதிபதிகள், மேலும் ஒரு மாதம் தள்ளிவைக்காமல் தேர்வை நடத்த ஏன் அவசரம் காட்டப்படுகிறது என்று கேட்டனர். மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்து கொண்டிருக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.

ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகள் ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதை, அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் சுட்டிக்காட்டினார். அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் வழக்கில் ஆஜராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும், கட்டுப்படுத்தபட்ட பகுதி மாணவர்கள் வெளியில் வர வேண்டியதில்லை என்றும் அரசு தரப்பு கூறியது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அரசு தரப்பு கேட்டது.

தொடர்ந்து அறிக்கை மட்டும் தாக்கல் செய்வதால் என்ன பலன்? கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வதை கவனிக்கவில்லையா? என வினவிய நீதிபதிகள், தற்போது பாதிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் பேரில், சுமார் 26 ஆயிரம் பேர் சென்னையில் மட்டுமே உள்ளனர் என்பதையும் குறிப்பிட்டனர்.

ஜூன் 30 வரை ஊரடங்கு உள்ள நிலையில், 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய் துறையினர் என அனைவரும் இக்கட்டான நிலைக்கு உள்ளாக வேண்டுமா? என்றும் நீதிபதிகள் கேட்டனர்.

ஊரடங்கு காலத்திலேயே 10ஆம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது என கேட்ட நீதிபதிகள், பள்ளிகளை திறப்பது குறித்து ஜூலையில்தான் முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவீர்களா என்றும் கேள்வி எழுப்பினர்.

9 லட்சம் இளம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விசயம் இது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இன்றைய விசாரணையில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றால், 10ஆம் வகுப்பு தேர்வுக்கு தடை விதிப்பது தொடர்பாக உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

பின்னர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 15 ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என்றனர்.

கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம் என்று கூறிய நீதிபதிகள், ஜூலை 2வது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என்பதை அரசு இன்று பிற்பகலில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

பிற்பகலில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் எதிர் வரும் மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என்றார்.

தமிழகத்தில் சுமார் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் கூறுவதாகக் குறிப்பிட்ட அவர், இதுவே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கு சரியான நேரம் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினர். மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுதுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்திருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

வழக்கை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான பிற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்ற

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments