நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் நீக்கப்பட்டதாக அறிவிப்பு

0 5700

நியூசிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் குணம் பெற்று வீடு திரும்பியதால், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு முழுவதும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் கொரோனா தொற்றால் மொத்தம் ஆயிரத்து 504 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை காட்டிலும், நோய் பாதிப்பை முற்றிலும் ஒழிப்பதை நோக்கமாக கொண்டு 7 வார காலம் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 17 நாட்களாக புதிதாக யாருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட வில்லை. இந்த நிலையில் அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments