அமெரிக்காவில் 20 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

0 1933

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 19 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஆனால் அங்கு இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து கடந்த 24 மணி நேரத்தில் 373 பேர் கொரோனாவுக்கு பலியானதால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ஆக கூடியுள்ளது. இதுவரை 11 லட்சத்து 33 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 17 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நியூயார்க் நகரில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக மேயர் பில் டி பிளாஸியா தெரிவித்துள்ளார். நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்திற்கு நீதிகேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் பங்கேற்பதால் கொரோனா தொற்று மேலும் அதிகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments