ஹஜ் யாத்திரை நடக்க வாய்ப்பில்லை என இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு

0 457

நடப்பாண்டு ஹஜ் பயணம் செல்வது தொடர்பாக சவுதி அரசிடமிருந்து பதிலேதும் வராததால் பணம் கட்டியவர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள கமிட்டியின் செயல் அலுவலர் மசூத் அகமதுகான், இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்வதற்கான ஆயத்த பணிகளுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், ஹஜ் யாத்திரை குறித்து சவுதி அரேபியா அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டில் ஹஜ் யாத்திரை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை என்று கூறிய அவர், பயணத்தை ரத்து செய்ய விண்ணப்பிக்காதவர்கள் கூட முழு பணத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments