காதல் தொல்லை கொள்ளையனை வெட்டி பாயில் சுருட்டிய குடும்பம்..! சிதம்பரம் திகில்

0 4419

டலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு வீடு புகுந்து காதல் தொல்லை கொடுத்த இரு சக்கர வாகன கொள்ளையனை குடும்பத்தினர் வெட்டிக் கொன்று பாயில் சுருட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. .

சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த பைக் மெக்கானிக்கான அன்பழகன் என்ற 21 வயது இளைஞன் வெள்ளிகிழமை காலை நண்பர்களைப் பார்க்க வெளியில் செல்வதாகக் கூறிவிட்டு தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளான்.

மாலை வரை வீடு திரும்பாத நிலையில், அன்பழகனின் தாய்மாமனுக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அரங்கநாதர் தெருவைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரின் தந்தை, அன்பழகனை தங்கள் குடும்பத்தினர் தாக்கியதில் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த இளைஞரின் குடும்பத்தார் போலீசாருடன் அங்கு சென்று பார்த்தபோது, அன்பழகன் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பாயில் சுருட்டப்பட்டு கிடந்தார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

எப்போதும் ஹோண்டா டியோவில் சுற்றிவந்த அன்பழகனும், 10ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமியும் கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். சிறுமியின் தந்தையோடு நட்பு இருந்ததால், விபரீதம் அறியாமல் குடும்பத்தினர் இளைஞரை வீட்டுக்கு வந்து செல்ல அனுமதித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அன்பழகன் கஞ்சா அடிமை என்பதும், அவன் மீது செங்கல்பட்டில் ஏராளமான வாகனத் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்ததால் அன்பழகனை விட்டு சிறுமி விலகத் தொடங்கியுள்ளார்.

அதனையும் மீறி அன்பழகன் சிறுமியை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு அடிக்கடி சிறுமியின் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்ததாகத் சொல்லப்படுகிறது. அவனைப் பற்றி நன்கு அறிந்ததால் சிறுமியின் பெற்றோர் மறுத்து வந்துள்ளனர். காவல்நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டு, போலீசார் அன்பழகனை எச்சரித்தும் அனுப்பி இருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமையன்று காலை வழக்கம்போல் சிறுமியின் வீட்டுக்கு கஞ்சா போதையில் வந்த அன்பழகன் மீண்டும் சிறுமியிடம் தகராறு செய்துள்ளான். ஒரு கட்டத்தில் சிறுமியின் தலைமுடியை பிடித்து தாக்க தொடங்கியதால், ஆத்திரம் அடைந்த சிறுமியின் அண்ணன், ஆவேசம் அடைந்து அன்பழகனின் பின்னந்தலையில் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அன்பழகனின் கைகள் இரண்டையும் கட்டி சிறுமியும் அவரது தாயும் சேர்ந்து தலையணையை வைத்து அழுத்தி கொன்றுள்ளனர். ஆத்திரத்தில் கொலையை செய்துவிட்டு மாலை வரை என்ன செய்வது என்று தெரியாமல் சடலத்தை போர்வையால் மூடி பாயில் சுர்ட்டி வைத்துள்ளனர்.

வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளனர். சிறுமியின் தந்தை கொலையை மறைக்க விரும்பாமல், கொல்லப்பட்ட அன்பழகனின் தாய் மாமாவுக்கு போன் செய்து நடந்த விவரங்களை கூறிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். அன்பழகனின் உடலை மீட்ட போலீசார், தப்பி ஓடிய சிறுமி, அவரது தந்தை, தாய், மகன் ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.

சிறுமிகள், இளம்பெண்கள் உள்ள வீட்டில் நட்பின் பெயரால் அனுமதிக்கப்படும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறும் போலீசார், இதுபோன்ற நபர்களால் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் குடும்பத்தினர் உணர்ச்சிவயப்படாமல், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுருத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments