செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா

0 1221

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்டமும் ஒன்றாகும். சென்னைக்கு அங்கிருந்து கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு வேலைக்கு வந்து செல்வோரிடமும், செங்கல்பட்டு ஆலைகளுக்கு வேலைக்கு செல்வோரிடமும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 71 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே கொரோனா பாதித்தோருடன் தொடர்பிலிருந்த 15 பேருக்கும் (71+15=86)பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து  செங்கல்பட் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை  1,710ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 689 பேர் குணமாகி வீடு திரும்பிய நிலையில், ஆயிரத்து 6 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து சிகிச்சை பலனின்றி இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments