சந்தையில் காய்கறிகள், பழங்களை காவல் வாகனம் மூலம் நசுக்கிய போலீசார்

0 914

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் காய்கறிச் சந்தையில் அதிவேகத்தில் புகுந்த காவல் வாகனம் காய்கறிகள் மற்றும் பழங்களை நாசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

சைரனை அலறவிட்டபடி வந்த காவல் வாகனம் சந்தை கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை நசுக்கியபடி செல்வதும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடுவதுமான காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

இது தொடர்பாக காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சந்தையில் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வந்த நிலையில் மக்கள் அதற்கு செவிமடுக்காததால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் இவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments