திங்கட்கிழமை முதல் பக்தர்களுக்காக திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்

0 1109

திங்கட்கிழமை முதல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படுகின்றன.

இதனால் பல்வேறு பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பக்தர்களை முறைப்படுத்துவதற்கும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கும் அதிகாரிகள் ஆலய நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.

டெல்லியின் புகழ்பெற்ற பங்களா சாகிப் குருதுவாராவில் பக்தர்களை வரவேற்க இரண்டரை மாதத்திற்குப் பின்னர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

ஊரடங்கின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தயாரித்து வழங்கியதில் இதுபோன்ற குருதுவாராக்கள் ஈடில்லாத சேவைகளை செய்துள்ளன. இதே போன்று அமிர்தசரஸ் பொற்கோவிலும் பக்தர்களை வரவேற்க ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சென்னையில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள், ராமேஸ்வரத்தில் உள்ள கோவில்கள், லக்னோவில் உள்ள மசூதிகள் என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரளாவில் சபரிமலை உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்கள் 9ந் தேதி தேதி முதல் திறக்கப்படுகின்றன. தனிநபர் இடைவெளி உறுதிசெய்யப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments