குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா

0 1271

குஜராத்தில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திடீரென ராஜினாமா செய்ததால் மாநிலங்களவைத் தேர்தலை சந்திக்க உள்ள கட்சித் தலைமைக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

ஏழு மாநிலங்களில் உள்ள 18 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்சய் பட்டேல் மற்றும் ஜிட்டுபாய் சவுத்திரி ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

இதுவரை அம்மாநிலத்தில் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருப்பதால் 2 மாநிலங்களவை இடங்களைப் பெறுவதில் காங்கிரசுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments