சிறப்பு ரயில்களில் 256 ரயில்களை ரத்து செய்துள்ள மாநில அரசுகள்

0 848

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பவதற்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில், 256 ரயில்களின் சேவையை மாநில அரசுகள் ரத்து செய்திருப்பது தெரியவந்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மே ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் 4 ஆயிரத்து 197 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அவற்றில் 4 ஆயிரத்து 116 ரயில்கள் அவை செல்ல வேண்டிய இடங்களைச் சென்றடைந்துவிட்ட நிலையில், 81 ரயில்கள் வழியில் சென்றுகொண்டிருக்கின்றன. இவற்றில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 105 ரயில்களையும் குஜராத் 47 ரயில்களையும், கர்நாடகம் 38 ரயில்களையும், மத்திய பிரதேசம் மற்றும் தமிழகம் தலா 4 ரயில்களையும் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 சிறப்பு ரயில்களை மட்டுமே இனி இயக்க உள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது. ரயிலில் பயணிக்கத் தயாராக இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பட்டியலை மாநிலங்கள் ரயில்வேயிடம் தராததும், இரு மாநிலங்களிடையேயும் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கு முக்கியக் காரணங்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments