மீட்கப்பட்ட 50 சவரன் தங்க நகைகள்.. உரியவரிடம் ஒப்படைக்காமல் மோசடி.. பெண் காவலர் கைது..!

0 29528

கோவையில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் மீட்கப்பட்ட 50 சவரன் தங்க நகைகளை உரிவர்களிடம் ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக பெண் காவலரை போலீசார் கைது செய்தனர்.

சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த 2ம் கட்ட காவலர் சுவப்ன சுஜா, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட நகைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் 11 வழக்குகளில் மீட்கப்பட்ட 50 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைக்காமல் சுவப்ன சுஜா இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததோடு, தொடர் விடுப்பில் சென்றுள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரியில் சுவப்னா சுஜா பணியிடை நீக்கப்பட் நிலையில் நகைகளை மோசடி செய்ததாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments