கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

0 1673

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு, உள்ளிட்டோரும் உடன் மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கேயே திமுக தொண்டரான அசோக்குமார், மகாலட்சுமி ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின், புதுமண தம்பதிக்கு பரிசுகளையும் வழங்கி வாழ்த்தினார்.

தொடர்ந்து அண்ணா அறிவாலயம் சென்ற ஸ்டாலின் அங்கு கலைஞர் கருணாநிதியின் திருவுருவச்சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments