யானையுடன் 2 வயது சிறுமிக்கு அபூர்வமான சிநேகம்..!

0 6358

கேரளாவில் இரண்டு வயதேயான சிறுமி யானையுடன் விளையாடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

திருவனந்தபுரம் ஸ்ரீகந்தேஸ்வரர் கோவிலில் பணிபுரியும் மகேஷ்-தேவிகானந்த் தம்பதிகளுக்குப் பிறந்த பாமா என்ற பெண் குழந்தைக்கு தற்போது இரண்டு வயதாகிறது. இவர்களின் வீட்டில் வளர்த்துவரும் 31 வயதான வாட்டசாட்டமான உமாதேவி என்ற யானை, குடும்பத்தில் ஒருவராகவே விளங்குகிறது.

பாமா பிறந்து ஆறு மாதங்களே ஆனநிலையில், அந்த யானையுடன் பயமில்லாமல் விளையாடப் பழகிவிட்டது. மகளுக்கும் யானைக்குமான பாசத்தை பார்த்து வியந்த தந்தை மகேஷ், யானைக்கு தேங்காய் கொடுப்பது, சிறுமியின் தலையில் யானை தனது தும்பிக்கையால் பாசத்துடன் தட்டுவது போன்ற காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து அவற்றை டிக்டாக்கில் வெளியிட்டதும் வைரலாகப் பரவத் தொடங்கி விட்டன

சிறுமிக்கு யானையிடம் ஒருபோதும் பயம் இருந்ததாக தெரியவில்லை என்கின்றனர் பெற்றோர்... யானைகள் உருவத்தில் மிகப் பெரியதாக இருந்தாலும் மனிதர்களிடம் இயல்பாக பழகும் குணம் கொண்டவை என்பார்கள். இதற்கு சாட்சியாக விளங்குகிறது குட்டிச் சிறுமிக்கும் யானைக்குமான நட்பு....! 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments