தீவிரவாதத்தைப் பரப்பும் பாகிஸ்தானை உலக நாடுகள் தண்டிக்க வேண்டும் -ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தல்

0 1561

உலகின் பல பகுதிகளுக்குத் தீவிரவாதத்தைப் பரப்பும் பாகிஸ்தானை உலக நாடுகள் குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஆப்கானில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நீடிக்க இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் அமைதி முயற்சிகளையும் தொடரும் என்றும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியான அழுத்தங்களால் தீவிரவாதத்தை ஒடுக்க ஒப்புக் கொண்ட பாகிஸ்தான், அதிலிருந்து தவறி விட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் இருந்து தீவிரவாதத்தை முழுவதுமாக ஒழிக்க அந்நாடு நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments