கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது

0 924

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை (2,00,562) தாண்டியுள்ளது. அந்தத் தொற்றிலிருந்து குணமானோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் 2ம் இடத்திலும், டெல்லி 3ம் இடத்திலும் உள்ளன.

மகாராஷ்டிராவில், அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 13 ஆக (70,013) அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 362ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் ஆயிரத்து 91 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் தொற்று பாதிப்பு 24 ஆயிரத்து 586ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 20 ஆயிரத்து 834ஆகவும், குஜராத்தில் 17 ஆயிரத்து 200ஆகவும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை உள்ளது.

உத்தர பிரதேசத்தில் மேலும் 348 பேருக்கும், ராஜஸ்தானில் 171 பேருக்கும், அசாமில் மேலும் 123 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் உத்தரகாண்டில் மேலும் 41 பேருக்கும், ஆந்திராவில் மேலும் 82 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பீகார், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், அசாம், கேரளா மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறும் நிலையில், 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் (97,581 active cases, 95,527 )குணமாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments