ஏடிஎம் இயந்திரத்தை சாவி போட்டு திறந்து உள்ளேயிருந்த பணம் கொள்ளை

0 1462

சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே கிருமிநாசினி தெளிப்பது போல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்துக்கு வந்த மர்மநபர், ஏடிஎம் எந்திரத்தை சாவி போட்டு திறந்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றான்.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போலீசார், எந்திரம் உடைக்கப்படாததால் வங்கி ஊழியர்கள் யாராவது தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

ஏற்கனவே மதுரவாயலில் பணிபுரிந்து தற்போது அம்பத்தூர் கிளையில் பணிபுரியும் சிவானந்தன் தான் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து வங்கி ஊழியரை கைது செய்த போலீசார், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கொள்ளையடிக்கப்பட்ட பணம் 9 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments