அமெரிக்க கருப்பின போராட்டக்காரர்களின் கூட்டத்திற்குள் புகுந்த லாரி

0 1447

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்ற போது, டேங்கர் லாரி ஒன்று கூட்டத்திற்குள் புகுந்ததால் அங்கிருந்தவர்கள் தெரித்து ஓடினர்.

மின்னாபொலிஸ் நகரிலுள்ள நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்களை நோக்கி வந்த லாரி கூட்டத்திற்குள் புகுந்து நின்றது. முதலில் சிதறி ஓடிய கூட்டத்தினர் பின்னர் லாரி ஓட்டுநரை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

அதில் லேசான காயங்கள் ஏற்பட்டதால் அந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனது நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியாத போதிலும், வேண்டுமென்றே தான் இதை செய்திருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் போராட்டக்காரர்கள் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments