அம்மா உணவகங்களில் இன்று முதல் மீண்டும் உணவுக்கு கட்டணம் வசூலிப்பு

0 594

சென்னையில் அம்மா உணவகங்களில் விலையில்லா விநியோகம் நிறுத்தப்பட்டு இன்று முதல் மீண்டும் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

15 மண்டலங்களில் உள்ள 407 அம்மா உணவகங்களில் ஊரடங்கையொட்டி ஏழை, எளிய மக்கள், சாலையோர வியாபாரிகள், வெளிமாநில தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தன்னார்வலர்கள் நிதியுதவியுடன் மாநகராட்சி நிர்வாகம் விலையில்லா உணவு வழங்கி வந்தது.

இதன் மூலம், 6 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அம்மா உணவகங்களில் உணவுக்கு கட்டணம் வசூலிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. அதன்படி இட்லி ஒரு ரூபாய்க்கும், தயிர் சாதம், சப்பாத்தி 3 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments