ரயில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்

0 4264

தமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையே ரயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ் கட்டாயம்’ என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் அரசு உத்தரவின்படி ரயிலில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் ‘இ-பாஸ்’ பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரயில் மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ‘ஆன்-லைன்‘ மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து ‘இ-பாஸ்‘ பெற்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments