மகாராஷ்டிராவில் ஊரடங்கு தளர்வு குறித்து இன்று அறிவிப்பு ?

0 575

மகாராஷ்டிரா மாநில அரசால் குறிப்பிட்ட சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலான ஊரடங்கை, சில தளர்வுகளுடன் 5ம் கட்டமாக நீட்டிப்பது குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. 

நாட்டிலேயே  அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில்,  ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

ஊரடங்கை விலக்குவது குறித்து கூட்டணி அரசுக்கு தலைமை வகிக்கும் சிவசேனாவிடம், தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆதலால் சிவசேனா தலைவரும், முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, இன்று சில தளர்வுகளை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.

அப்போது மும்பை, மும்பை பெருநகர மண்டலம்,( Mumbai Metropolitan Region) புனே ஆகியவை தவிர்த்து பிற இடங்களுக்கு தளர்வுகளை அவர் அறிவிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments