3 நாள் பச்சிளம் குழந்தையை திருடிச் சென்ற பெண்

0 843

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை திருடிச் சென்ற பெண்ணை சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் பர்தா அணிந்த பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிவதும் பின்னர் துணியால் சுற்றிய ஒரு குழந்தையை எடுத்துச் செல்வதுமான காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன.

அந்தப் பெண் குழந்தையைப் பார்த்துவிட்டுத் தருவதாகக் கூறி உரியவர்களிடம் இருந்து வாங்கியதாகவும் யாரும் எதிர்பாராத நேரத்தில் குழந்தையுடன் நழுவியதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பெண் மற்றும் கடத்தப்பட்ட குழந்தையை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments