இந்தியா: கொரோனா பலி 5 ஆயிரத்தை கடந்தது

0 1341

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 8 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டிருப்பதால், பாதிப்பு எண்ணிக்கை  1 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலக நாடுகளை கலங்கடித்து வரும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 168ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 197ஆகவும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 184ஆக உயர்ந்த நிலையில், அதற்கடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக திகழும் டெல்லியில் 18 ஆயிரத்து 549ஆகவும், குஜராத்தில் 16 ஆயிரத்து 343ஆகவும் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது.

கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ராஜஸ்தான் மாநிலத்தில் 8 ஆயிரத்தையும், மத்திய பிரதேசத்தில் 7 ஆயிரத்து 800-யும்,உத்தர பிரதேசத்தில் 7 ஆயிரத்து 400-யும், மேற்கு வங்கத்தில் 5 ஆயிரத்து நூறையும் (5,100) கடந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 8 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 193 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 82 ஆயிரத்து 143ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 164ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 89 ஆயிரத்து 995 பேர் சிகிச்சை பெறும் நிலையில், மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 984ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments