தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நாளை முதல் நீதிமன்றங்களைத் திறக்க அனுமதி

0 6816

தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் நாளை முதல் நீதிமன்றங்களைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்கள் காணொலிக் காட்சி வாயிலாக இயங்கி வந்தன. இந்த நிலையில், நாளை முதல் தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, திருவாரூர், நாகை, கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நீதிமன்றங்களைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மேலும், வழக்கு தொடர்ந்தவர்களை நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கக் கூடாதென்றும், 5 நீதிபதிகளைக் கொண்டு மட்டுமே நீதிமன்ற அறைக்குள் வழக்கு விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் காணொலிக் காட்சி வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments