மகாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா உறுதி

0 1273
மகாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா உறுதி

மகாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரானோ பரவத் தொடங்கியது முதல் போலீசார் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியிருந்தது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 325ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்ததால் அந்தத் தொற்றுக்கு பலியான போலீசாரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments