அடங்க மறுக்கும் கொரோனா... உயரும் பாதிப்பு தொடரும் அச்சம்

0 1957
அடங்க மறுக்கும் கொரோனா... உயரும் பாதிப்பு தொடரும் அச்சம்

சென்னையில் ஒரே நாளில் 618 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், ஒரே மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி விட்டது. தமிழகம் முழுவதும் பலி ஆன 154 பேரில் சென்னையில் மட்டும் 113 பேரை, கொரோனா காவு வாங்கி விட்டது.

தமிழகத்தை கொரோனா ஆட்டிப்படைத்து வரும் சூழலில், வைரஸ் தொற்றால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 618 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், இங்கு மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி விட்டது.

செங்கல்பட்டில் ஒரே நாளில் 61 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டி உள்ளது. காஞ்சியில் 12 பேரும், திருவள்ளூரில் 9 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.திருவண்ணாமலை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களால் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது.

சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 353 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை 6 ஆயிரத்து 895 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.சென்னையில் ஒரு வயது ஆண் மற்றும் ஒரு வயது பெண் குழந்தையும், நெல்லை யில் 2 வயது பெண் குழந்தையும் என 5 வயதுக்கு உட்பட்ட மொத்தம் 10 குழந்தை கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கொரோனாவால் உயிரிழந்த 154 பேரில், 113 பேர் சென்னையைச்சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 11 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர்.மிரட்டும் கொரோனாவை விரட்டும் பணியில் தமிழக சுகாதாரத்துறை முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருந்தபோதிலும், கொரோனாவின்கிடுக்கிப்பிடி, சென்னையை இறுக்கி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments