இந்தியா-சீனா எல்லைத் தகராறில் 3வது நாட்டின் தலையீட்டுக்கு அவசியமில்லை:சீனா

0 5013

எல்லைத் தகராறில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததை சீனா நிராகரித்து விட்டதோடு, இந்த விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை என்று கூறியுள்ளது.

இந்தியா-சீனா இடையேயான  எல்லைத் தகராறில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் Zhao Lijian, தற்போதைய மோதல் போக்கை தீர்த்துக் கொள்ள மூன்றாவது நாட்டின் தலையீடை இந்தியா-சீனா இருநாடுகளுமே விரும்பவில்லை என்றார்.

இந்தியா-சீனா இடையேயான பிரச்சனைகளை, பேச்சுவார்த்தை மற்றும்  கலந்தாலோசனை மூலம், முறையாகத் தீர்த்துக் கொள்ளும் திறன் தங்களுக்கு இருப்பதாகவும், மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு அவசியமில்லை என்று  சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments