மத்திய அரசின் மெளனம் சீன விவகாரத்தில் யூகத்தை அதிகரிக்க செய்கிறது-ராகுல் காந்தி

0 1844

சீனாவுடனான மோதல் போக்கு நிலவும் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது யூகத்தை அதிகரிக்க செய்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

லடாக்கில் இந்தியா மற்றும் சீன படையினர் இடையே கடந்த 5ம் தேதி முதன்முதலில் கைகலப்பு நேரிட்டது. இதையடுத்து இருதரப்பும் அங்கு படைகளை குவித்ததால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவுகளில், கொரோனா பரவலால் நிலவும் பிரச்னைக்குரிய காலகட்டத்தில் சீனாவுடனான எல்லை விவகாரத்தில் அரசு மெளனம் காப்பது, அதுகுறித்து யூகத்தையும், குழப்பத்தையும் மிகப்பெரிய அளவில் அதிகரிக்க செய்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆதலால் இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்று நாட்டு மக்களிடம் மத்திய அரசு விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments