தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

0 2182

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால், பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்தார். 

வரும் 31ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை மீனவர்கள் அரபிக் கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனப் புவியரசன் எச்சரித்தார். கேரளத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments