மாநிலங்களவைச் செயலக அதிகாரி ஒருவருக்குக் கொரோனா தொற்று

0 826

மாநிலங்களவைச் செயலக அதிகாரி ஒருவருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தின் 2 தளங்கள் மூடப்பட்டன.

நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவைச் செயலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வந்தன. அலுவலர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்கிற விதிமுறைகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாநிலங்களவைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டடத்தில் அவர் பணியாற்றிய தளம், அவர் சென்றுவந்த தளம் என மொத்தம் 2 தளங்கள் மூடப்பட்டுள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments