பொதுமக்கள் ஒத்துழைப்பின் மூலமாகத்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 4395
பொதுமக்கள் ஒத்துழைப்பின் மூலமாகத்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க முடியும் என முதலமைச்சர் எடபபாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மே 31 ஆம் தேதியுடன் 4ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னையில் மக்கள் தொகையும், மக்கள் நெருக்கமும் அதிகம் என்பதால் தொற்று அதிகம் பரவியுள்ளது என அவர் கூறினார்.

வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், கொரோனாவை பற்றி மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், அந்தந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments