வனத்துறை அதிகாரிகளை தாக்கிவிட்டுத் தப்பிய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

0 1075

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகளை தாக்கிவிட்டுத் தப்பிய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் தடுக்க விளைநிலத்தில் விவசாயி ஒருவர் விரித்திருந்த வலையில் நேற்று இரவு ஒரு சிறுத்தைப்புலி சிக்கிக் கொண்டது.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை மீட்டு வனப்பகுதியில் விட முயற்சி மேற்கொண்டனர். அப்போது வலையில் இருந்து தப்பிய சிறுத்தை 2 வனத்துறை அதிகாரிகள் மீது பாய்ந்து காயப்படுத்திவிட்டு ஓடியது.

இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே புதர் ஒன்றின் அடியில் பதுங்கியிருந்த சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடித்த வனத்துறையினர் அதனை காட்டுப் பகுதியில் விட கொண்டுசென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments