சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்த 6 பேருக்கு கொரோனா

0 3873

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்ற 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக 60 நாட்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கிய நிலையில், சென்னையில் இருந்து 56 பயணிகளுடன் ட்ரூ ஜெட் விமானம் நேற்று முன் தினம் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைந்தது.

பயணிகள் அனைவரும் ஹோட்டல்கள் மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பரிசோதனையின் போது இவர்கள் 6பேருக்கும் கொரோனா அறிகுறி எதுவும் தென்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே விமானத்தில் பயணித்த நோய் பாதிப்பு இல்லாதவர்கள் அவர்வர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு அளவில் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பயணிகளும் சுய பாதுகாப்புடன் இருப்பதே கொரோனாவில் இருந்து தப்பிக்க உதவும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments