4பேர் பயணிக்க 180 இருக்கைள் கொண்ட விமானத்தைப் புக் செய்த குடும்பம்

0 9375

போபாலில் இருந்து டெல்லிக்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் செல்வதற்காக 180 இருக்கைள் கொண்ட ஒரு தனி விமானத்தைப் பதிவு செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் போபால் விமான நிலையத்தில்  தனி விமானம் பதிவு செய்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு குடும்பத்தில் 4 பேர் டெல்லி செல்வதற்கு 180 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் ஏ 320 வகை விமானத்தைப் பதிவு செய்துள்ளனர். இதற்காக அந்த விமான நிறுவனம் 10 லட்ச ரூபாயைக் கட்டணமாகப் பெற்றுள்ளது.

பொதுவாகத் தனி விமானங்களுக்கான கட்டணம் விமான எரிபொருளின் விலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. விமான எரிபொருளின் விலை மிகவும் குறைந்துள்ளதால் இப்போது ஒரு மணி நேரத்துக்கு பயன்படுத்த 5 லட்ச ரூபாய்க்குத் தனி விமானம் பதிவு செய்ய முடிவதாக விமான நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments