தந்தையுடன் சைக்கிளில் 1200 கி.மீ பயணித்த ஜோதி குமாரிக்கு ஐஐடி-ஜீ இலவச பயிற்சி வழங்க சூப்பர்-30 தயார்

0 1509

காயமடைந்த தந்தையை 1200 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வைத்து சொந்த ஊருக்கு கொண்டு சென்ற பீகார் சிறுமி ஜோதி குமாரிக்கு, ஐஐடி-ஜீ தேர்வுக்கான இலவச பயற்சியை அளிக்க பிரபல கோச்சிங் நிறுவனமான சூப்பர்-30 முன்வந்துள்ளது.

டெல்லி குருகிராமில் இ-ஆட்டோ ஓட்டுநராக இருந்த  மோகன் பாஸ்வான் விபத்தில் காயமடைந்த நிலையில் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தார்.

15 வயதே ஆன அவரது மகள் ஜோதி குமாரி தந்தையையுடன் துணிச்சலுடன் ஏழு நாட்கள் சைக்கிள் மிதித்து பீகார் சென்றடைந்தார். அவரது இந்த அபார திறனை பாராட்டி ஜோதி குமாரி விரும்பும் படிப்புக்கு உதவ ராம் விலாஸ் பாஸ்வானின் கட்சி முன்வந்துள்ளது.

பீகார் சமாஜ்வாதி கட்சி ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. டெல்லியில் உள்ள இந்திய சைக்கிள் பெடரேஷனும் அவருக்கு பயிற்சி வழங்க முன்வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments