20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஒத்திவைப்பு?

0 1087
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஒத்திவைப்பு?

ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் நடத்த திட்டமிடப்பட்ட 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2022ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படலாம் எனவும், இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவில் அப்போட்டி நடைபெறுமா என சந்தேகம் நிலவுகிறது. 2021ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்துக்கு அப்போட்டி ஒத்திவைக்கபடலாம் என முதலில் தகவல் வெளியானது.

ஆனால் 2021ம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால், ஒரே ஆண்டில் இரண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதையும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொண்டு 2022ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படலாம் எனவும், இன்று ஆலோசனை நடத்தப்பட்டபின் அதிகாரபூர்வ அறிவிப்பு எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments