கட்டுக்குள் வர மறுக்கும் கொரோனா.. உச்சம் தொட்ட அச்சம்..!

0 3375

கட்டுக்குள் வர மறுக்கும் கொரோனாவால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 53 ஆயிரமாக உயர, சுமார் 64 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். மற்றொரு பக்கம் கொரோனா உயிர்ப்பலி, 4 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. 

உலக கொரோனா பாதிப்பில் "டாப் - டென்" நாடுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியாவில், வைரஸ் தொற்று உறுதி ஆவோர் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,387 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டி விட்டது.

மஹாராஷ்டிராவில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு ஒரே நாளில் 75 காவல்துறையினர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

2- வது இடம் வகிக்கும் தமிழகத்தில், அடங்க மறுக்கும் கொரோனாவால் பாதிப்பு கணிசமாக உயர்ந்து உள்ளது.

டெல்லியில் ஒரே நாளில் 792 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி விட்டது. குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகிறது.

ராஜஸ்தானில் பாதிப்பு, 7 ஆயிரத்து 600 ஐயும்,, மத்திய பிரதேசத்தில் 7 ஆயிரத்தையும் தாண்ட, உத்தர பிரதேசத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண் ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

மேற்கு வங்காளம், ஆந்திரா, பீஹார், கர்நாடகா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் வைரஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. தெலங்கானாவில் வைரஸ் தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தை எட்டும் நிலையில் உயர்ந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, ஹரியானா ஆகிய மாநிலங்களிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை, 963 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 83 ஆயிரம் பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வர, 64 ஆயிரத்து 425 பேர் இதுவரை குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments