கொரோனாவில் இருந்து உலகை திசை திருப்பவே எல்லையில் சீனா தந்திரம்-வி.கே.சிங் கண்டனம்

0 2989

கொரோனாவில் இருந்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பவே சீனா லடாக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது என முன்னாள் ராணுவ தளபதியும் மத்திய அமைச்சருமான வி.கே.சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை உலகிற்கு அளித்ததற்காக உலக நாடுகள் சீனாவை குற்றஞ்சாட்டி வருவதாக தெரிவித்துள்ள அவர், பல நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலைமையை சமாளிக்கும் நோக்கில் இந்தியாவுடன் எல்லைப் பிரச்சனையில் சீனா ஈடுபட்டுள்ளது என விகே சிங் கூறியுள்ளார். இதுபோன்ற திசைதிருப்பும் தந்திரங்களில் சீனா பலமுறை ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

DBO பிரிவில் இந்தியாவின் கட்டுமானப் பணிகளை தடுப்பதற்காக இரண்டு பிரிகேட் ராணுவ பிரிவை சீனா நிறுத்தி உள்ளதை அடுத்து லடாக் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments