ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் மனு

0 515

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படும் புகாரில், கடந்த 23ம் தேதி ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மே 31ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி, மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு பட்டியலிடப்பட்டுள்ளது. அதே போல் சரணைடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரி கைதுக்கு முன்பாக ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments