வீட்டில் தங்கிய உறவினர்கள் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா

0 10838

திருவண்ணாமலை மாவட்டத்தில் உறவினர்கள் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 வயது முதியவர், 9 வயது சிறுவன் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நல்லவன் பாளையத்தில் உள்ள வீட்டுக்கு ஊரடங்கிற்கு முன்பு கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியிலிருந்து வந்த உறவினர்கள் 5 பேர், கடந்த 16 ஆம் தேதி சொந்த ஊர் திரும்பினர்.

அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கியிருந்த உறவினர் வீட்டில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 90 வயது முதியவர், ஒரு பெண், 2 சிறுவர்கள் உள்பட 5 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments