இந்தியாவில் தவிக்கும் சீனர்களை மீட்க அந்நாடு திட்டம்

0 582
இந்தியாவில் தவிக்கும் சீனர்களை மீட்க அந்நாடு திட்டம்

கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் தவித்து வரும் சீன மக்களை மீட்டு அழைத்துச் செல்ல அந்நாடு முடிவு செய்துள்ளது.

ஊரடங்குக்கு முன் இந்தியாவில் சிக்கியுள்ள மாணவர்கள், ஊரடங்குக்கு மு வந்து சிக்கிக் கொண்ட சுற்றுலா பயணிகள், தொழில் துறையினர் உள்ளிட்டோரை மீட்க அந்நாடு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சீனத் தூதரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் நாடு திரும்ப விரும்புவோர் சிறப்பு விமானங்களுக்கான டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் சீனாவின் வூகான் நகரில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் அங்கிருந்த 700 இந்தியர்களை இந்தியா சிறப்பு விமானம் மூலம் மீட்டது. தற்போது பாதிப்பு நாடுகள் பட்டியலில் இந்தியா 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து சீனர்களை மீட்க அந்நாடு நடவடிக்கைகளை மேற்கொண்டது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments