ஒலிம்பிக்கில் 3 முறை தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்

0 2040
ஒலிம்பிக்கில் 3 முறை தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்

ஒலிம்பிக் போட்டிகளில் 3 முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடி வீரர் பல்பீர் சிங், தனது 95வது வயதில் காலமானார்.

பஞ்சாப் மாநிலம் மெகாலியில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பல்பீர் சிங், மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவு காரணமாக கடந்த 18 ஆம் தேதி முதல் அரை கோமா நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

1948, 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்திய ஹாக்கி அணி வெற்றி வகை சூடுவதற்கு முக்கிய காரணமாக இருந்த பல்பீர் சிங், அதிக கோல் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார். இவருக்கு 1957 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 2015 ஆம் ஆண்டில் மேஜர் தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments